பிரிந்துவிடுவாரோ

என் மனம்படும் ......
வேதனையை கேளீர் ....
என்னவன் அருகில் இருந்தால் ...
பிரிந்துவிடுவாரோ என்று .....
ஏங்கும் - அவர் இல்லை என்றால் ....
இல்லையே என்று ஏங்கும் ....!!!

என்னவன் இருந்தாலும் .....
இல்லாவிட்டாலும் ....
என் மனம் வேதனையில் ...
வேந்தே போகிறது .....!!!
+
குறள் 1295
+
நெஞ்சொடுபுலத்தல்
+
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 215

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 12:06 am)
பார்வை : 53

மேலே