புரிதல்

ஆயிரம் கோடி
வார்த்தைகள் இருந்தும்
ஒரு வார்த்தையை
தேடுகிறேன் -என்னவளின்
அன்பிற்காக!
காதலின் புரிதலுக்கு
வார்த்தைகள் உண்டோ!
என் மனதின் உச்சரிப்பு
அவள் கண்களில் தெரிகிறதே!
அவளின் ஏக்கம்
எனக்குள் புரிகிறதே!
மெளனம் தவிர
வேறு மொழிகள் இல்லை!
என் காதலை சொல்ல!