கடன்

கடைசியாக
நான்
பேசிய அழைப்பில்
கடன் இடி வந்து
காதில் விழுந்தது..!

வார்த்தைகளெல்லாம்
காதில்
வாங்கிக்கொண்ட
என்
இதயம்

செத்துவிடலாம் என்று
நினைக்க வைத்தது...


என்னடா இந்த
வாழ்க்கை
என்று
வெறுப்படைய வைக்கிறது மனம்...


பணம்
இருப்பவருக்கு ஆயிரம்
கவலைகள்...

பணம்
இல்லாதவருக்கும்
ஆயிரம்
கவலைகள்..!


ஆனால்
இப்போது என்னவோ!
என்
நெஞ்சைக் கிழிக்கிறது
இவ்வளவு கஷ்டத்திலும்
நான்
படிக்க வேண்டுமா என்று..!

என்
கண்கள்
போன போக்கிலே
கல்வியும் போகட்டும்
என்றிருக்கிறேன்...

எழுதியவர் : திருமூர்த்தி (19-Aug-15, 7:02 pm)
Tanglish : kadan
பார்வை : 156

மேலே