எந்நிறமும் உன்னிறம் - தேன்மொழியன்
![](https://eluthu.com/images/loading.gif)
எந்நிறமும் உன்னிறம்
~~~~~~~~~~~~~~~~~~
நீல நிறத்தில் நின்றவள்
நிழலில் வர்ணம் வரைகிறாள் ..
மஞ்சள் பூவை மறந்தவள்
மவுன கவிதையை புதைக்கிறாள்...
அத்தனை அடியிலும் கவியவள்
எத்தனை சீரில் சிரிக்கிறாள் ...
ஓவிய திரையில் ஒளிர்பவள்
தரையில் மெதுவாய் படர்கிறாள் ..
கற்பூர கலையை கற்றவள்
காதோர கானத்தில் வீழ்கிறாள் ...
வாசலை வாசத்தில் நனைப்பவள்
கார்மேக கரமாய் நீள்கிறாள்..
நட்சத்திர நாணத்தில் குழைபவள்
ஆறாவது அறிவை வெறுக்கிறாள் .
என்னைத் திட்ட முறைத்தவள்
எதனை மறைக்க முயல்கிறாள் .....?
- தேன்மொழியன்