பட்டியல்
ரசிக்கப்படாத கோடை மாலை
தரிசிக்கப்படாத அதிகாலை
சுகிக்கப்படாத பிறை வானம்
கவனிக்கப்படாத மின்மினி வனம்
நடக்கப்படாத புல்வெளிச்சோலை
கடக்கப்படாத பூமரச் சாலை
இசைக்கப்படாத புல்லாங்குழல்
வசிக்கப்படாத மலையுச்சி மரநிழல்
இன்று முதல் ......
இவற்றோடு இணைகிறது
உன்னால் உணரப்படாத
என் காதலும் ........