தண்டிப்பு

அம்மாவின் சொல்லடி
சிதறியது மேசை புத்தகங்கள்
உண்ணல் விலக்கி
தாழிட்டவளின் தலையணையில் ஈரம்
வழக்கத்திற்கு அதிகமாக
உண்டது செல்லப் பிராணி
விடியலில்
சோர்ந்த அவள் முகத்தை
சோகமாய்ப் பார்த்து
உறக்கமும் உணவும் இழந்த
அவள் அம்மாவைப் போலவே
ஆறுதல் சொன்னது
செல்லப் பிராணி
ஆனாலும் அவள் மனதில்
நாவினால் சுட்ட வடு.
சி. அருள் ஜோசப் ராஜ், (ராஜ்கவி )