காதல் அல்லது கல்யாண தோல்வி

தண்டவாளம் தாளாத
புகை வண்டிப்பயணம்.
விசையற்ற மின்சாரம்,
போன்ற ஒரு சம்சாரம்.
உயிரற்ற துடிப்பு,
உணர்வற்ற பிடிப்பு.
ஆஸ்தி இழந்த ஜமீன்
ஆண் துணை தொலைத்த பெண்;
கோயில் இல்லா ஊரில்
குடியிருக்குமா?
குடியில் இருக்குமா?