ரிவர்ஸ் ரேஸ்

ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோட ஒட்டகங்களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக்கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெதுவாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார்.

மனதுக்குள் திட்டியபடியே மகன்கள் இருவரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார்.

அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந்தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?

விடை: ரொம்ப சிம்பிள். பெரியவர் சொன்னது, 'உங்க ஒட்டகங்களை மாத்திக்கோங்க!' தம்பி ஒட்டகம் அண்ணனிடமும், அண்ணனின் ஒட்டகம் தம்பியிடமும் இருக்கிறது என்று வையுங்கள். நிபந்தனைப்படி, யாருடைய ஒட்டகம் மெதுவாகப் போகிறதோ, அவருக்கே அதிக சொத்து. எனவே, அண்ணனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து, அவனது ஒட்டகத்தைத் தம்பி வேகமாக ஓட்டுவான். அதேபோல தம்பியைத் தோற்கடிக்க அண்ணனும் வேகமாக ஓட்டுவான். அதாவது ரிவர்ஸ் ரேஸ்!

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (21-Aug-15, 8:53 pm)
பார்வை : 815

மேலே