உன் நினைவு சிலுவைகள் (2 -ம் அத்தியாயம் )

நட்டநடு ராத்திரியில் நத்தைபோல நகர்ந்துவந்து
வெட்டவெளித் திண்ணையிலே வெண்ணிலவை ரசிக்கின்றேன்....

வெண்ணிலவு முகம்பார்க்க அதில் உன்நினைவு எனைத்தாக்க
நடுநிசி நேரத்தில் கூட என்னைவிட்டு நகர்வதில்லை உன் நினைவு....

நீ செல்லும் சாலையில் காற்றாக வந்தாவது
உன் காலடித்தடம் தேடி முத்தமிட துடிக்குது
முழுதாக என் மனது....

வெறும்வாயை மெல்பவன் போல் நான்
வெறும்வாயை மெல்லவில்லை அதில்
நித்தம் நித்தம் உன் நினைவை அசைபோட்டுக் கொண்டிருப்பேன்...

உன் முழுநீளப் பார்வையால் என்னை
மொத்தமாய் முளுங்கிவிட்டாய்.
மிச்சம் மீதி இல்லாமல் என்னை
மென்று நீயும் தின்றுவிட்டாய்...

தப்பிவிட நினைத்தாலும் தானாக மாட்டிவிட்டேன்
உன் தத்தை மொழி ஏச்சுகளும் தாராளம் கேட்டுவிட்டேன்...

என் மனதின் உன் நினைவுகளை மாற்றிவிட நினைத்தாலும் . அது மாண்டுவிடத் துடிக்கிறதே தவிர மாற்றிவிட மறுக்கிறது....

முரணாகப் பேசாதே முடிவை ஒரு வார்த்தை சொல்...
நான் வாழ்வதும் வீழ்வதும் என் வாழ்க்கையின் கையில் அல்ல
உன் வார்த்தையின் மெய்யில் உள்ளது....

நீ என்னை நினைக்க மறந்தாலும்
உன் நினைவை சிலுவைகளாய் என் மனது என்றும் சுமந்துகொண்டே வாழும்....

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.... (23-May-11, 10:35 am)
பார்வை : 459

மேலே