இது எந்த ஊரு நியாயம்மா

முக்காசட்டி கஞ்சியை
மூவிரண்டு ஆறு பேருக்கு
மிச்சமின்றி
பிரிச்சும் வைச்ச

ஒரு சுழி உள்ளியும்
ஒரு விரல் பச்சைமிளகாயையும் தந்த
கொஞ்சம் கொஞ்சம் அள்ளி திண்னேன்
குறையவில்ல உன் சட்டியில் கஞ்சி

கர்ணன் பெத்தபிள்ளையா நீ
காணலனு கேட்கும் போது
வடிச்ச கஞ்சியும்
வஞ்சமின்றி தந்தது

ராம் ராம்னு எழுதியா தந்த
என் சட்டியில் கஞ்சி மிதக்குது
ரத்தினம் முத்து போல
உன் சட்டியில் கஞ்சி மூழ்கியே கிடக்குது

எட்டி பார்த்திருவோமுனு
எடுத்து மடியில வச்சிட கஞ்சிய
எத்தன நாலு இப்படி குடிச்சிருப்பனு
எந்திரிச்சு நீ ஊறுகாய் எடுக்கும் போது

உனக்கு தெரியாம
உன் சட்டியில் கைவிடும் போதுதான்
உண்மை என்னானு தெரிஞ்சிகிட்டேன்
உன் பசி என்னமா பாவம் செய்தது

தூர்வாறுனாலும் கிடைக்கல கஞ்சி
தொண்டையில ஏம்மா பாத்திகட்டி வச்சிருக்க
சோறு தருவனு காத்திருந்த உன் குடலுக்கு
சோகத்த நீத்துரியோ நீத்து தண்ணீர்கொண்டு

ஏம்மா இந்த ஓர வஞ்சனை
ஏமாத்தக்கூடாது சொல்லி தந்த
ஈவு இரக்கமின்றி
ஈரத்துணி போடுறியே
இது எந்த ஊரு நியாயம்மா......!!!!

எழுதியவர் : ராஜா (22-Aug-15, 2:28 pm)
பார்வை : 184

மேலே