மந்தனா

என்னய்யா ஒம் பொண்ணுக்கு மந்தனா-ன்னு பேரு வச்சிருக்க?

நீ ஏய்யா ஒம் பொண்ணுக்கு வந்தனா-ன்னு பேரு வச்சிருக்க?

சினிமா தொலைக் காட்சித் தொடர்களிலே அந்த மாதிரி பேரக் கேட்டிருக்கேன். எனக்கும் என் மனைவிக்கும் அந்தப் பேரு பிடிச்சுப்போச்சு . எங்க பொண்ணுக்கு அந்தப் பேரையே வசசுட்டோம்.

சரி வந்தனா-ன்னா என்ன அர்த்தம்னாவது தெரியுமா?

அதெல்லாம் யாருக்கய்யா தெரியும்?

இந்திப் பேர பிள்ளைங்களுக்கு வைக்கறதுதான் இப்ப நாகரிகம் கவுரவம். அர்த்தம் தெரியாம பேரு வைக்கக் கூடாதய்யா. வந்தனா-ன்னா 'போற்றி வழிபடு'ன்னு அர்த்தம்.

சரி ஒம் பொண்ணுக்கு மந்தனா-ன்னு பேரு வச்சிருக்கறயே அந்தப் பேருக்கு என்னய்யா அர்த்தம்?

மந்தனா-ன்னா மகிழ்ச்சியான-ன்னு அர்த்தம். அது பாரசீக மொழிச் சொல். இசுலாமியப் பெண்கள் மற்றும் இந்திக்கார இந்துப் பெண்களுக்கும் அந்தப் பேர வைக்கறாங்க. இந்தி மொழியே சமஸ்கிருதமும் பாரசீக (பெர்ஷியன்) மொழியும் கலந்த கலப்பட மொழிதாய்யா. அதனால தான் உருது தெரிஞசவங்களுக்கு இந்தியும் இந்திக்காரங்களுக்கு உருதும் நல்லாப் புரியும்.
-------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (23-Aug-15, 6:26 pm)
பார்வை : 148

மேலே