சிங்காரச் சென்னை
வந்தாரை வாழவைக்கும்
எங்கள் தமிழ்நாட்டில்,
நொந்தோரையும் வாழச் செய்யும்
எங்கள் சென்னை......
வரலாறு வந்து நிறையச் சொல்லும்.
எதிர்காலம் நோக்கி சீறிப் பாயும்....
சாதி மதம் ஒரு பொருட்டில்லை.
சாதிப்பவர்களை இது விடுவதேயில்லை....
உயர்வுகள் நோக்கி வழி காட்டும்.
பள்ளம்தான் வேண்டுமா..குழி தோண்டும்....
இப்படித்தான் என்று வாழ இயலாது.
எப்படியும் கூட வாழ முடியாது....
இயற்கை எல்லாம் தோற்று போகும்.
செயற்கை வென்று அதனைக் கொல்லும்.....
மாடமாளிகை, ஆடம்பரங்கள்,
பாழும் மனிதர்களின் பாவ வாழ்க்கை....
ஏற்றத் தாழ்வு வெகு இயல்பு - என
வாழ்க்கை தத்துவம் தப்பாய் சொல்லும்.
அத்தனை கலைகளும் வந்து கற்கலாம்
எதுவும் வேண்டாம் எனினும் வாழ்ந்து விடலாம்...
என்ன வேண்டுமானாலும் தரும் பூதம்
சற்று நிலை மாறிடின் அழிக்கும் பிசாசு....
உள்ளே வந்தால் மயக்கி விடும்
வெளியேச் செல்ல வழி மறிக்கும்....
அத்தனை பேரும் சமம் இதற்க்கு.
ஆண்டவன் வந்தாலும் இயல்பு மாறாது.....
நரகம் தனியில்லை...
சொர்க்கம் தனியில்லை...
சொர்க்கநரகம்
எங்கள் மா நகரம்.