ஓசை
பாராளுமன்றத்தில்
ஊராளும்
ஒரு கட்சி.....
ஓராயிரம் செய்த
செய்யாத
திட்டங்களை
வாசிக்கும்.....
இதை
செய்யாத
செய்யத் தெரியாத
வெள்ளை வேட்டிகள்
மேசையிலே
சங்கீதம்
ஓயாமல்
போடுது.....
பிரச்சினைகளை
தீர்க்காமல்
பாராளுமன்றத்தில்
பாடிப்
பயன் என்னவோ?
மேசையில்
தட்டாமல்
மனித
மனங்களை
தட்டுங்கள்
திட்டங்கள்
வெற்றியாகும்.....
உங்கள் கை தட்டல்களை
காணும்
போது
ஏதோ கட்டாய
பயிற்சியோ
என எண்ணத்
தோணுதே......
சட்டசபை
வெறும் சத்த
சபையாய்
ஆனது......பேசவேண்டிய
விசயங்கள் சட்டசபை
சங்கீத
வித்துவான்களின்
வேண்டாத
ஓசையால்
வீணாய்ப்
போனதே......
வானம்
அழுகிறது
ஆனால்
இங்கே
மரங்கள்
அறுபடுகிறது.....