தென்கச்சிசுவாமிநாதன் நினைவாஞ்சலி

தேன்போன்ற தகவல்களை அள்ளித்தந்த
தென்கச்சி சுவாமிநாதன் கதையைக்கேட்டால்
முக்கனியின் சாறுகளை ஒன்றாய்சேர்த்து
முழுமையுடன் பருகி்ட்ட தீஞ்சுவைகிட்டும்

கரும்பொத்த கருத்தமைந்த கதையைக்கேட்கும்
இரும்பொத்த இதயம்கூட இளகிப்போகும்
நன்நெறியற்ற மாந்தர்க்கு அங்குசமாகி
நிலையான பேரறிவை நல்கிடும்நாளும்

தென்கச்சி சொற்கள் தேன்கட்சியாகி
வீண்பேச்சி வம்புதும்பு வழக்கைநீக்கும்
அவர்கட்சி இவர்கட்சி பேச்சைப்போக்கி
எவர்கட்சியும் இவர்கட்சாய் மாறிப்போகும்

நகைச்சுவையாய் செய்திகளை அள்ளித்தந்தே
நெஞ்சைவிட்டு நீங்காத ஒளிவிளக்கானார்
தகவலென்ற சொல்லுக்கே பொருளாய்நின்று
அகந்தனிலே அழியாநல் முத்திரையானார்.

எழுதியவர்
சொ.பாஸ்கரன்

எழுதியவர் : (26-Aug-15, 4:54 am)
பார்வை : 56

மேலே