மேலே புறா கீழே மனிதன்

மசூதிகளுக்கு மேல்
சில பறவைகள் வந்து சென்றன
அதன் பெயர் புறாக்கள்...

மசூதிகளுக்கு கீழ்
சில மனிதர்கள் வந்து சென்றனர்
அவர்களுக்கு பெயர் இஸ்லாமியர்
**************************************************

கோவில்களுக்கு மேல்
சில பறவைகள் வந்து சென்றன
அதன் பெயரும் புறாக்கள்...

கோவில்களுக்கு கீழ்
சில மனிதர்கள் வந்து சென்றனர்
அவர்களுக்கு பெயர் இந்து
**************************************************

தேவாலயங்களுக்கு மேல்
சில பறவைகள் வந்து சென்றன
அதன் பெயரும் புறாக்கள்தான்...

தேவாலயங்களுக்கு கீழ்
சில மனிதர்கள் வந்து சென்றனர்
அவர்களுக்கு பெயர் கிறிஸ்தவர்
**************************************************

எங்கு சென்றாலும்
புறாக்களின் இனம் புறாக்களாகவே இருக்கிறது...
மனிதனின் இனம் மட்டும்தான் மாறி இருக்கிறது...

இது புரிந்ததால்தான் என்னவோ
புறாக்கள் இன்னும் மேலே இருக்கிறது...
மனிதன் இன்னும் கீழே இருக்கிறான்...
**************************************************

எழுதியவர் : ஜின்னா (26-Aug-15, 2:48 am)
பார்வை : 474

மேலே