தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி
சமூக தளங்களில் சாடல்கள்
சல்மான்கான் வழக்கின் தீர்ப்பு
வழங்கப்பட்ட 2 நாட்களில்
நேரிட்ட தலை கீழ் மாற்றத்திற்கு!
வசதி படைத்தவனுக்கு ஒரு நீதி
வக்கில்லாதவனுக்கொரு நீதியா?
சமூகம் உற்று நோக்க ஆரம்பித்து விட்டது
விவகாரம் விகாரம் தான்
மச்சல் லாலுங் என்னும் ஒரு சில்சங் (அஸ்ஸாம்)
கிராமத்தான் 23 வயதில் சிறைக்குள்ளே
வன்முறை வழக்கு! செக்சன் 326.
விசாரித்து இருந்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால்
அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கலாம்
ஆனால் அவர் இருந்தது சிறைக்குள் 54 ஆண்டுகள்
உள்ளே தள்ளி மறந்து விட்டனர்
சட்டம் அறியாமை சாவகாசமாய் 54 ஆண்டுகள் கழித்து
ஜூலை 2005ல் விடுதலையான 2 ஆண்டுகளில்
அவர் இறந்து விடுகிறார்.
இது போன்ற ஏராள கண்ணீர் கதைகள்
நிறைந்ததே நீதி துறை.
வெறும் 13 நீதிபதிகள் 10 லட்சம் இந்திய மக்களுக்கு
என்ற விகிதம் சட்டத்துறை சமாளித்து வருகிறது.
இது அமெரிக்காவுடன் ஒப்பிட்டால்
அங்கே 10 லட்சம் மக்களுக்கு 55 நீதிபதிகள்
2013 வரை நிலுவை உள்ள வழக்குகள் எண்ணிக்கை
300 லட்சம் வழக்குகள்
புலூம்பெர்கின் கணக்குப்படி உண்ணாமல் உறங்காமல்
ஒரு மணி நேரத்தில் 100 வழக்குகள் வீதம்
என முடித்து வைத்தால் இன்னும் சரியாக
35 வருடங்களாகும் இதையெல்லாம் சரி செய்ய.
ஹரிஷ் நரசப்பா (நிறுவனர்: தக்ஷ்) கூற்றுப்படி:
கீழ் நீதிமன்றங்களில் 3 கோடி வழக்குகள்
45 லட்சம் வழக்குகள் ஹை-கோர்ட்களில் மற்றும்
ஒரு லட்சம் வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் என்று இன்று ஒரு கணக்கு.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம்
என்ற ஒரு பெருமையில் திளைக்கும் நமக்கு
மனதில் ஒரு கசப்பான கேள்வி?
எங்கே போகிறோம் ?
வாங்கிய சுதந்திரம் சுகம் தருமா?
ஆளப்பிறந்தவர்களல்ல நாம்
ஆளத்தெரியாதவர்கள்;
வாழப்பிறந்தவர்களல்ல நாம்
வாழத்தெரியாதவர்களே !