செல்ல புள்ளைக்கு ஒரு வாழ்த்து

அன்பான செல்ல புள்ள
ஆறாம் அகவைக்குள்ள ...
இன்று அடியெடுத்து வைக்கும் புள்ள ....
ஈரேழு உலகம் எல்லாம்
உனக்கின்று வாழ்த்து சொல்ல
ஊர் மெச்ச நீயும் தான்
எந்நாளும் வாழனுண்டா
ஏறாத கோவில் இல்ல
ஐயா நான் உன்னை பெற
ஒரு நாளில் நீயும் தான் அம்பானி ஆவ புள்ள
ஒளி விளக்கா வந்தவனே ....
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு
நீ வாழ வாழ்த்துகின்றேன் .....
இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ....