அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்,
சிறுமையாய் கழிந்தன பொழுதுகள்.
காவேரி, பெரியார் உரிமைகள்,
இழந்தே நிற்கும் நிலைமைகள்.
திரிகோணமலை, யாழ்பாணத்திலும்,
அழிந்தே போன அவலங்கள்.
ஐயாயிரம் ஆண்டு உழைப்பினிலே,
உருவான தேசத்தின் இதயத்திலே,
அணு கழிவுகள் புதைக்கும் கயவர்களின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
இன உணர்வை கூட உயிரை நீத்தே,
உணர்த்த வேண்டிய கூட்டமாய்,
நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் வேகமாய்.
மொழியை காக்க போரா?
உந்தன் ஆண்மை எங்கே தோழா?
நம் இனத்தை காக்க மண்டியிட்டோம்,
தேகத்தீயாய் கொழுந்து விட்டோம்.
மனிதநேயம் மறந்த மாந்தரின்,
அடிமையாய் ஒரு அறுபது ஆண்டுகள்.
அடிமை சங்கிலி அறுத்தெறிவோம்,
இனத்தை காக்க சேர்த்தேழுவோம்,
மானம் காக்க மடிந்தவர் மண்ணில்,
ஓர் இறுதி தீர்ப்பு எழுதிடுவோம்