2025-ஆம் ஆண்டு முதல் மருத்துவம் மருத்துவரின் கையில் இருந்து தொழில்நுட்பத்தின் கைகளுக்கு மாற்றம்

வரப்போகும் பத்தாண்டுகளில் நாம் ஆங்கில படத்தில் கண்டவற்றை நேரில் காணும் அறிய வாய்ப்புகள் ஏற்படும். மருத்துவம், மருத்துவரின் கையில் இருந்து தொழில்நுட்பத்தின் கைகளுக்கு இடம் மாற்றமாகிக் கொண்டிருக்கிறது.

ஆரோக்கியத்தை குறித்துக் காட்டும் கைகளில், தோள்பட்டையில் அணிந்துக்கொள்ளும் படியான உபகரணங்கள், மொபைல் ஏப்-கள் என நமது வாழ்க்கை முறையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கிறது.

மற்றும் இந்த மாற்றத்திற்காக உலகெங்கிலும் பல ஆயிரக் கோடி கணக்கான பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது. இப்போதே 3டி பிரிண்டிங் எனும் தொழில்நுட்பத்தின் மூலம், வேறொரு உச்சத்தை எட்டியுள்ளது மருத்துவ உலகம்....

இணைக்கப்பட்ட மருத்துவ கருவிகள் (Connected Medical Devices)

சிறிய வகை நெட்வர்க் சென்சார் மூலம் இணைக்கப்பட்ட கருவி. இதன் மூலம், அனைத்து வகையான உடல்நல கருவிகள், ஃபிட்னஸ் பேன்ட்ஸ், இன்சுலின் மற்றும் பேஸ்மேக்கர் போன்றவற்றை இணைக்க முடியும்.

2020ஆம் ஆண்டுக்குள்

இந்த கருவியை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டுவர இரு பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. உடலில் பொருத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும் இந்த கருவியின் மூலம், ஒவ்வொரு நொடியும் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும்.

3டி பயோ பிரிண்டிங்

வரும் 2018ஆம் ஆண்டில் இந்த 3டி பிரிண்டிங் மருத்துவ துறையில் பெரும் புரட்சியாக உருவெடுக்கும் என நம்பப்படுகிறது. கடந்த மாதத்தில் கூட ஓர் குழந்தையின் மண்டை ஓட்டை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான், அறுவை சிகிச்சை செய்து மாற்றி அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் பாகங்களை தயாரிக்க ஆராய்ச்சி

தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உடல் பாகங்களை தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறார்கள்.

டாக்ஸ் ஆன் கால் - Docs on Call

இது கிட்டத்தட்ட பி.பி.ஓ (B.P.O) போல தான். வரப்போகும் பத்தாண்டுகளில் இது பெரிய அளவில் உருவெடுக்கும் என கூறுகிறார்கள். இது மொபைல் ஆப்ஸ், வீடியோ காலிங், ஈமெயில் என பல வகைகளில் சாத்தியப்படலாம்

ஆன்லைன் பயன்பாட்டில்

அவசர தேவைகளில், சூழ்நிலைகளில் உடனடி சிகிச்சைக்கு இது உதவும் என கூறுகிறார்கள். அமெரிக்காவில், இந்த தொழில்நுட்பம் இப்போதே ஆன்லைனில் பயன்பாட்டில் இருக்கிறது.

மின்னணு மருத்துவ தகவல்கள் (Electronic Health Record)

ஒவ்வொருவரின் மருத்துவ தகவல்களையும், கணனியின் சர்வரின் உதவியோடு கிளவுட் சேமிப்பு செய்து வைத்து, அதை ஆப் அல்லது ஈமெயில் உதவியோடு எப்போது வேண்டுமானாலும் எடுத்து கையாளும் படி செய்யலாம்.

சரியான நேரத்தில், சரியான மருத்துவம்

இதனால், ஒரே பரிசோதனையை பல முறை எடுக்க வேண்டாம். மற்றும் ஆன்லைனில் அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது. மருத்துவரும் அவசர நிலையில் நோயாளிக்கு உடனே ஏற்ற சிகிச்சை அளிக்க முடியும்.

எழுதியவர் : செல்வமணி (படித்ததில் பிடி (26-Aug-15, 12:15 pm)
பார்வை : 96

மேலே