அன்பும் அடக்கு முறையும்

ஒரு பெண் தன் கணவனை விடவும்
தான் பெற்ற குழந்தையை தான்
அதிகமாக நேசிக்கின்றாள்
ஆனால் பிரிவு என வரும்போது
பிள்ளையை கூட பிரிய துணிவாள்
கணவனை பிரிய ஒப்ப மாட்டாள்
காரணம் ?
பிள்ளையை பிரியும் தாயிக்கு
எந்த அவப்பெயரும் ஏற்ப்படாது
ஆனால் கணவனை பிரிந்தால்
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருசன்
கணவனே கண்கண்ட தெய்வம்
படி தாண்டாள் பத்தினி
என் பல அடிமை
எண்ணங்களை பெண்கள் மத்தியில்
விதைத்துள்ளது சமூக விலங்குகளான
ஆணும் பெண்ணும்
ஓர் பெண் தனக்கு பிடிக்காத
கணவனோடு வாழ்வதற்கு காரணம்
அன்பல்ல எண்ணங்களின் அடக்குமுறையே

(செந்தில்குமார் ஜெயக்கொடி)

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 2:18 pm)
பார்வை : 882

மேலே