காமத்தில் இருந்து கடவுளுக்கு
வணக்கம் !
காமத்தில் இருந்து கடவுளுக்கு !!
காமம் புதிரும் இல்லை புதிதும் இல்லை. கூச்சமும் இல்லை குதர்க்கமும் இல்லை. கூடாததும் இல்லை, குற்றமும் இல்லை.
நாம் பெரும்பாலானோர் கண்கூடாக ஒன்றை கண்டிருப்போம். நாய்கள் நடுத்தெருவில் தனது காமத்தை வெளிபடுத்தும். பட்டப்பகல் என்றோ மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்றோ ஒருபோதும் அது என்னாது. இரவில் தான், தனிமையல் தான் உடலுறவுக் கொள்ள வேண்டும் என கட்டுபாடுகள் எதையும் தனக்கு தானே விதித்துக் கொள்ளாது. கலவி முடிந்ததும் தந்து இயல்பு நிலைக்கு வந்துவிடம். என்னதான் எப்போதும் தன்னோடு ஓர் இணை இருந்தாலும் காமமற்ற நேரத்தில் காமத்திற்கான அறிகுறி இன்றி இயல்பாக இருக்கும். மாறாக ஓர் பெட்டை நாயை பார்க்கும் போதெல்லாம் காமம் கொள்ளாது.
ஆனால் ஆறறிவு ஜீவ ராசிகள் அனைத்திலும் மேம்பட்ட மனிதர்களாகிய நாம் தான் நமது காமத்திற்கு, புணர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிப்பதோடு மட்டுமல்லாது விலங்குகளின் காமத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கிறோம். காமம் வந்தால் தான் துணையை நாடவேண்டும் என்றில்லாமல், காணும் பெண்ணிடத்து எல்லாம் காமம் கொள்கிறோம். இது விலங்கினும் கீழான செய்ல் அல்லவா ?
காம தணிவிற்கு தான் ஆணுக்கு ஓர் பெண்ணோ, பெண்ணிற்கு ஓர் ஆணோ தேவையே தவிர, காணும் ஆணிடமெல்லாம் பெண்ணும், காணும் பெண்ணிடமெல்லாம் ஆணும் காமம் கொண்டால் அதற்கு பெயர் உண்மையிலேயே நோய். காம நோய்.
நாய்கள் இரண்டு நடுத்தெருவில் கலவி கொல்லும் போது சிலர் அதை எதோ கொலை குற்றம் போல் கருதி கல் எரிந்து நாய்களை விரட்டுவர். சிலர் கண்டும் காணாததைப் போல் ஓர் அருவருப்பான முக பாவனையோடு விலகி செல்வர். ஆனால் இன்று ஒவ்வொரு மனிதனையும் காம நோய் தோன்றிக்கொண்டு துரத்திக்கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை நாம் ஏற்க வேண்டும்.
பொதுவாக காமம் என்பது என்ன ? அதன் மீது ஏன் மனிதனுக்கு இவ்வளவு கட்டுப்பாடு ? அடக்குமுறை ? காழ்ப்புணர்ச்சி ? காமத்திற்கு தான் நாம் பிறந்தவர்கள் என்பதை எப்படி மறந்து போனான் ?
அன்பை பற்றி, நட்பை பற்றி, நேசம் பற்றி, காதல் பற்றி, வலி பற்றி, சோகம் பற்றி, துக்கம் பற்றி என அனைத்தையும் பற்றியும் வெளிப்படையாக எல்லோரிடமும் கூச்சமின்றி பேசும் மனிதன், அதே போன்று காமத்தை பற்றி உடன்போக்கை பற்றி பேச அஞ்சுவது ஏன் ? பேச தயக்கம் ஏன் ? கூச்சம் ஏன் ?
காமத்தை அசிங்கமாக அருவருப்பாக குற்றமாக போதித்து யார் ?
இயற்கையின் இயல்புகளில் மனிதனின் குணங்களில் காமமும் ஒன்று. முதன்மையானது அதுவே. அப்பேற்பட்ட ஒன்றை மனிதன் ஒதுக்கி வைப்பது ஏன் ? அப்படி காமத்தை கண்டு அஞ்சுபவர் கூசுபவர் அருவருப்பாய் கருதுபவர் ஏன் காமத்திற்கு அடிமையாக வேண்டும் ? பெரும்பாலும் ஏன் காமத்தை பற்றி சிந்திக்க வேண்டும் ?
காமத்தை பற்றிய அடிப்படை புரிதலே இங்கு தவறாக உள்ளது. எல்லோரும் இங்கு காமத்தை அடக்கவே போதிக்கின்றனர். காமத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று போதிப்பதில்லை. காமம் என்ன அற்புதத்தை நிகழ்த்தும் என்று யாரும் சொன்னதில்லை, கலவி எப்படி எவ்வளவு நேரம் கொள்வது என்றும் யாரும் நமக்கு போதிக்கவில்லை. இப்போது உள்ள புணர்ச்சி எல்லாம் இயந்திர மயமானது, ஆன்மா ஒன்றாதது.
ஆனால் ஓஷோ காமத்தை பற்றி முழுமையாக தெளிவாக தனது சொற்ப்பொழிவுகளில் கூறியுள்ளார். அந்த சொற்பொழி ஆனது “காமத்தில் இருந்து கடவுள் வரை” என்ற பெயரில் நூல் வடிவில் வந்துள்ளது.
கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த நூலை படித்து காமம் பற்றிய உண்மையை அறிய வேண்டும்.
மதங்களும் அதன் குருமார்களும் எப்படி காமத்தை தவறாக போத்திதுள்ளனர் என்பதையும், இயற்கையான காமத்தை அதன் போக்கில் செல்ல வழி விடவேண்டியதன் அவையம் குறித்தும் கூறியுள்ளார்.
காமத்தில் இருந்தே உண்மையான அன்பு விளைய முடியும் என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார். காமமே கடவுளை காண முதல் படி காமத்தை கடக்காமல் கடவுளை காண இயலாது என்ற யதார்த்தை இந்நூலின் மூலம் நாம் அறியும்படி விளக்கியுள்ளார்.
காதலில் என்னென்ன நிலைகள் உண்டு என்பதையும், அதில் தான் கண்டுபிடித்த ஆன்மீக நிலையையும் குறிபிட்டுள்ளார். அதே போன்று கலவியின் போது கணவன் குழந்தையாகவும் மணைவி தாயாகவும் மாறுவதையும் அதுவே உண்மையான அன்பு எனவும் கூறுகிறார்.
அனைவரும் கட்டாயம் இந்நூலை படியுங்கள். காமம் பற்றிய உண்மையை அறிவீர்கள், காமம் பற்றி பிறரிடம் இயல்பாய் பேசுவீர்கள், காமத்தை கட்டுபடுத்த கஷ்ட்டப்பட வேண்டாம், காமம் இயல்பான ஒன்றாய் காண்பீர். இயந்திரத் தனமான புணர்ச்சியில் இருந்து விடுபட்டு ஆன்மாவோடு ஒன்றிணைந்த புணர்ச்சியை கற்றுக் கொள்வீர். கட்டாயம் படிக்கவும்.
நூலின் பெயர் ; காமத்தில் இருந்து கடவுளுக்கு
ஆசிரியர் : ஓஷோ
பதிப்பாசிரியர் : சுவாமி மோகன் பாரதி
விலை : ரூ.70
(செந்தில்குமார் ஜெயக்கொடி)