என்னவள்

நிலவு என்றேன்
தொட்டு விடாதே
என்றாள்..

மலர் என்றேன்
பறித்துவிடாதே
என்றாள் ...

கயல் என்றேன்
பார்த்து விடாதே
என்றாள் ..

மான் என்றேன்
பிடித்து விடாதே
என்றாள் ...
இவை எல்லாம்
காதலிக்கும்போது
மனைவி ஆனபின்

மயில் என்றேன்
என்னை ஆட்டுவிக்கிறாள்

எழுதியவர் : கவியாருமுகம் (26-Aug-15, 12:54 pm)
Tanglish : ennaval
பார்வை : 62

மேலே