காதல் கடல்

ஆழ்கடல் அதிலே
தன்னந்தனியாக மிதந்திடும்
மரப்படகைப் போலே
தத்தளிக்கிறேன் நான்
கடற்கரை நோக்கி
ஓயாமல் ஓடிடும்
அலைகள் போலே
என் நினைவுகள்
ஓய்வின்றி உன்னையே
நோக்கி வருகின்றன
இரட்டை மனநிலையில்
இருக்கும் பெண்ணே
ஒற்றை கயிற்றை
வீசிவிட்டு சொல்
சம்மதம் எனில்
கயிறை பிடித்து
கரை சேர்கிறேன்
இல்லை எனில்
கழுத்தை நெருக்கி
உயிர் பிரிகிறேன்