தெள்ளுதமிழ் சொல்வேன் தினம்

சிக்கலில் வேல்வாங்கும் சிங்கார வேலருக்கு
வெக்கையா என்ன வியர்க்கிறதே - பக்கமுள்ள
புள்ளி மயிலாட தோகை யதுவிசிற
தெள்ளுதமிழ் சொல்வேன் தினம்
***********************************************************************************
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிங்காரவேலர் , வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம்