சீக்கிரம், திருந்துங்கள்

வாழ்நாள்

தீரும் எரிபொருள் போல,
பயணம் முடிந்து விடலாம், சட்டென;
மனஸ்தாபங்களுடன்
தாபங்களுடனும்
நாட்களை கிழித்து வீசாதீர்கள்
காலம் பொன்னானது.

சாகும் நாள் தெரிந்து போனால்
வாழும் வாழ்க்கை சுவைக்காது
வாழும் காலம் அறிந்தும்

வாழத்தடுக்கும்
சந்தேக கோடு
இன ஈகோ
இறுமாப்பு எல்லாம்
தெரியாதா
அவை உங்களுக்கே
நீங்கள்
வைக்கும் ஆப்பு என்று,.

அடுத்தவர் கூட அனுசரித்தால்
அழகாகும்
வாழ்க்கை
சுகமாகும்
எல்லாப் பிரச்சினைகளும்
தீரும் சொந்தம் சுகமே தரும்

போதும்
புரணி பேசியே
பொழுதை கழித்தது

வாழுங்கள்
வாழ விடுங்கள்.!

எழுதியவர் : செல்வமணி (28-Aug-15, 9:08 pm)
பார்வை : 102

மேலே