சூறாவளி

சில ஆடவர்க்கு

ஒரு பெண்

அழகாய்
இருப்பது குற்றம்,

ஆனந்தமாய்
சிரித்தால் பாவம்,

கண்ணை உறுத்தும்
காதல் துரத்தும்

சூறாவளியாய்
அவளை சுற்றும்

இடறி விட
துடிக்கும்

அடைந்து விட
நினைக்கும்

ஆண் மனமே,

அவள்
அழகாய் இருப்பது
அப்படியென்ன
தவறு?

அதற்கு எதற்கு
தண்டனை,

பார்வைகளில்,
பாய்ச்சலில்,
வேட்டையாட
யார் கொடுத்தது
சுதந்திரம்.

சுற்று சூழலை
பாதுகாப்பது
சமூக நீதியெனில்

பெண்ணை பேணிக்காப்பது
எங்கனம்?

ஒரு துளி விஷம் போதும்
தூண்டிலில்
தூவலில்

ரகசியமான உங்கள் நோக்குதலில்
ஆபத்து என்பது
உங்கள் ஆயுதமானால்
தாங்குமோ இந்த தேசம்?

நகங்களை வெட்டுங்கள்,
வெட்டப்படவேண்டியவை அவை
கண்களில் கருணை ஏற்றுங்கள்

காந்தமும் காதலும் காம விபத்தை தரும்
பண்பான வாழ்க்கை புண்ணாகிப்போகும்.
முட்களை தூவாதீர்கள்
புற்களை வளர விடுங்கள்

எங்கள் வீட்டு பூக்கள் மட்டுமல்ல
அவை எம் குல தெய்வங்கள் !

எழுதியவர் : செல்வமணி (28-Aug-15, 7:53 pm)
Tanglish : sooravali
பார்வை : 132

மேலே