விற்பனையாகா புத்தகம் நான்
புத்தகக் கண்காட்சியில்,
ஏதோ ஒரு கடையில் நுழைந்து.
ஏதோ ஒரு நூலை எடுத்து.
ஏதோ ஒரு பக்கத்தை திருப்பி.
ஏதோ இரு வரிகளை படித்து.
ஏதோ ஒன்றை புரிந்துகொண்டு.
ஏதோ ஒரு காரணத்துக்காக,
மூடி இருந்த இடம் வைத்து,
வாங்காமல் திரும்ப செல்லும் -
மக்களை போலவே,
என்னையும்.......
கையாள்கிறது இச்சமுதாயம்.