வானமோ முடியில் கைகளோ அடியில்
இலட்சத்துக்கு
ஆசைப்பட்டு
இருந்த
இருபதுக்கெல்லாம்
அதிஸ்டலாப
சீட்டெடுத்தோம்!!
அனாதையில்லங்கள்
ஆயிரம் இருக்க
அப்பன் ஆத்தாள்
அறுபதாம் திருமணத்தை
நட்சத்திர விடுதியில்
நாலு நாள்
திறம்படச்செய்தோம்!!
நக இடுக்கில்
கிடந்த தோலை
துடைத்துக்கொண்டே
நாகரீகமாய்
விபச்சாரத்தை
விலக்கவேண்டும்
என்றோம்!!!
ஒன்பதுக்கு
திறக்கப்படும்
மதுக்கடையில்
எட்டுக்கே
ஊறிக்கிடந்தோம்!!
இயந்திரப்புகை
போதாதென
இன்னும் இன்னும்
உதடுகளால்
ஊதித்தளினோம்!
வெண்சுருட்டுக்களை...
மானிடமே!!
இரத்தமோடும்
இரக்கமில்லா
இம்சையாளர்களே!!
வாழ்வென்பது யாது??
பூமத்திய ரேகயில்
பூக்கள் கொய்து
விளையாட கிடத்த
சந்தர்ப்பமல்லவா!!
கண்களின் கடசிச்சொட்டு
பார்வையின் கருவூலம்
தீர்ந்துபோகும் வரை
உலகின் அழகை
அள்ளி உண்ண
கிடைத்த வரமல்லவா!!!
வெண்மேகம் பிடித்து
மோகம் குழைத்து
திரட்டி உருட்டிப்பிழிந்து
பாலைவனத்தில்
பருக கிடைத்த
பானமல்லவா!!!
அமிர்தம் சுரந்து
இடையிடையில்
அமில திவலை
கலந்த காதலை
சுவாசிக்க கிடைத்த
சொர்க்கமல்லவா!!
இருக்கும் வரை இரந்து
இல்லான் இன்பத்தில்
மகிழக்கிடைத்த
மருதானிக்
கோலமல்லவா!!
மனதாரச்சொல்கிறேன்!
மனது ஆறா
சொல்கிறேன்!
எழுபதோ எண்பதோ
ஆண்டுக்குத்தானே
இந்த சதைக்கோர்வை
நிலைத்திருத்தல்
சாத்தியமாகும்....
அதற்குள் இத்தனை
அடிமைத்தனமா
அறியாமையில்....
போதும்!!
கிடைத்த வாழ்வை
கீழ்த்தரமாய் வாழ்ந்த
மானிடம் போதும்...
மற்றவனும் நான்
எனும் எண்ணம்
கொள்வோம்!!
அன்பினில்
வற்றா மேகம்கொண்ட
வானம் செய்வோம்