கிறுக்கல்கள்

பாரதியின் பாட்டில்
சிறுமியின் தேடல்
காக்கைக்கு அடுத்த ஒன்று
................................................................
முதியோர் இல்லத்தில் தாத்தா
வழி மறக்கவில்லை
பேத்தி
................................................................
இங்கே சோறும் தீர்ந்து
பானையும் தேய்கிறது
- சுரண்டல்
................................................................
முகவரி கிடைக்காத கவிதை
முதல் வரியோடு தவறியது
என் விழிகளில்
................................................................
சென்னை நகர
சாதாரண பேரூந்தில்
குளிரூட்டி வசதியா
வியப்பில் நான்
அருகில் நீ
................................................................
நான் எங்கோ
தொலைந்து கிடக்கிறேன்
நீயோ அருகில்
கிடந்து தொலைகிறாய்
................................................................
எந்தன் சொற்பொருளாய்
நீ இருப்பாய் என
எண்ணம்
ஆனால் எந்தன்
எதிர்ச்சொல்லாய் "நீ"
................................................................

எழுதியவர் : கவியரசன் (28-Aug-15, 10:47 pm)
Tanglish : kirukkalkal
பார்வை : 57

மேலே