வாட்ஸப் வந்து பார்

வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்)

உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும்...
ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும்
கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்…

குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்…
செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்… wink emoticon
லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும்….

பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய்…
போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும்….
அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான்…

ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும்…
நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள்...
சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி சிக்கிதவிப்பாய்….

3G சிக்னல் தெய்வமாய் தெரியும், ஓசி WI-FI மேல் ஆசை பிறக்கும்…. wink emoticon
போன் Hang ஆகி கடுபேற்றும்…,History டெலிட் என்பது மகிழ்ச்சிதரும்…
DP-யையும், ஸ்டேட்டசையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும்,

இருக்கும் 9 குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் பண்ண தோன்றும்,
தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள் குரூப்பில் வந்து கும்மி அடிப்பார்கள்
தனியாய் சிரிப்பது பழகிபோகும்,குரூப்புக்கு ஒரு உத்தமன் அட்வைஸ் செய்வான்….

இரண்டு மணிநேரம் வராவிட்டாலும் 400 unread மெசேஸ்கள் வந்து பயமுறுத்தும்….

வாட்ஸப் வந்து பார்….

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 11:51 pm)
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே