உடம்பு
கருவோடு உருவாகி..,
கடலோடு சாம்பலாகும் ..,
தேகமடா ..,
இதற்கிடையில் ..,
ஏற்ற தாழ்வுகள் ..,
ஏனடா ..,
உடலை பிரிந்தால் ..,
உடம்பு அது ..,
உனக்கில்லை ..,
நிலத்தை பிரித்தாய் ..,
புவியை பிரிக்க ..,
இயலவில்லை ..,
உயிர் பிரிந்தால் ..,
உனக்கு மண்ணில் ..,
இடமில்லை .
பிறந்த உடலை கூட ..,
கொண்டு போக .,
முடியவில்லை .
பின் ஏனடா ..!
இயற்கையை ..,
பங்கிடுகிறாய் .
நதியை ..,
பிரித்து நடகமாடினாய் ..,
உன்னை இன்று பிரித்தது ..,
யாரோ ..!
பஞ்சபூதங்களை பிரிக்கும் ..,
உனக்கு உலகில் உயிர் ..,
உண்டோ ..!
கானகத்து உயிர்கள் ..,
தத்தம் இனத்தை ..,
அழிப்பதில்லை .
மனிதனை கொல்லும்..,
நீ ..! மனிதனா ..,
அரக்கனா ..,
ஆறறிவுள்ள ஜீவியா..,!
அறிவில்லாத பிராணியா..,!
ஏனடா பிரிவு ..,
எதற்க்கடா உயிர்களின் ..,
அழிவு.
வேண்டுமடா ..,
ஒற்றுமை உணர்வு ..,