கடவுளின் மெளனம் -முஹம்மத் ஸர்பான்
நிழலை விரிக்கும் மரங்கள்
எதிர் எதிரே முகம் பார்க்கிறது
கானகத்தில்........,
புயலாய் வீசிடும் காற்று
சோலையோரம் சாந்தமாய் மாற
மென் மலர்கள் பூத்ததுவா.....?
அல்லிக் குளத்தருகில் செந்தமிழ்
திரைகள் "நாராய் நாராய் செங்காழ் நாராய்"
பாட எந்தப்புலவன் அமர்ந்திருக்கிறான்.
ஏழு துருவங்களிலும் புவியில்
மட்டும் மாந்தன் வாழ்வது எதற்காய்..?
பாவமான உள்ளமும் தீயதை தூண்டும்
பொன்னும் பொருளும் இங்கே தானா உள்ளது.
கடவுளே!! பதிலைச் சொல் மெளனிக்காதே!!