எப்போது வருவாயடி நீ - மணப்பெண்

நித்தம் உனைத்தேடி
நித்திரையின்றி தவிக்கிறேன்..
பெண்ணே நீ யார் என்று
தெரிந்துகொள்ள பேராவலாய்..

என் இலட்சிய கனவுகளை
செம்மை படுத்திட..
எட்டா உயரங்கள் என நினைக்கும்
அத்தனையும் எட்டி புடித்திட..
கண்களில் எனக்கான காதலை
கொண்டு காத்திருக்கும் என் கண்மணியே
நீ யார்..

இத்தனை நாள் வேண்டிய வரம்
இவள்தான் என் இறைவா.என என் தாய் மகிழ்ந்திட..
சொர்க்கத்தில் தந்தையின் ஆசி அவசியம்.
கிடைக்கும் என அக்கா ஆனந்தத்தில் திழைக்க.
அண்ணனுகேற்ற அண்ணி இவள் என சகோதரன் சந்தோசமடைய..
எனக்கான என்னவளே எங்கிருக்கிறாய் நீ..

கண்ணனுக்கான ராதையைப் போல,
ராமனுக்கான சீதையைப் போல,
என்னக்கான என்னவளே உன்
வருகையை வேண்டி தவமிருக்கிறேன்..
திருமணம் விரும்பும் துறவியாய்..

எப்போது வருவாயடி நீ..எப்போது வருவாய்..
ஈருயிராய் சந்தித்து ஒருயிராய் இந்த மண்ணில்
மாய்ந்திட நீ எப்போது வருவாய்.

எழுதியவர் : கணேச மூர்த்தி (30-Aug-15, 3:31 pm)
பார்வை : 331

மேலே