வளைகுடா வாழ்க்கை
வேலைதேடி வளைகுடா வந்தவரெல்லாம் ...
தன் தலைவியை கட்டி அணைத்து
உறங்கிய நாட்களை விட ...
தன் தலையணையை கட்டி அணைத்து
உறங்கிய நாட்களே அதிகம் ...
அப்பா என தெருமுனை இருந்து
மழலைகள் அழைத்ததை விட ....
அலைபேசியில் இருந்து அப்பா என
அழுதிட்ட நாட்களே அதிகம் ...
வேலைதேடி வளைகுடா வந்தவரெல்லாம் ...
வாழ்க்கையை மொத்தமாய்
தொலைத்தே போனார்கள்
என்பதே உண்மை ....