மலை மனம் நீ

மலையை உடைத்து
கலை வடிவம் தந்தால்
சிலை ஆகி நிற்கும்
மலையை உடைத்து
கற் சிதறலானால்
சாலை ஆகும்
மலையைக் குடைந்து
குகை பாதையானால்
இரயில் பயணங்கள் தொடரும்
மலை உயர்ந்து
சிகரம் தொடு என்று சவால்
விடுமானானால்
உயரம் தொட்டு கொடியேற்றியவன்
புகழ் உலகில் வாழும்
மலையினும் மானப் பெரிது
மனித மனம்
மனம் நினைத்தால்
உலகில் எதுவும் வசமாகும்
வானம் வசமாகும் பூமியும் வசமாகும்
வானிலும் பூமியிலும்
புதிது புதிதாக நீ தேடும்
ஒவ்வொன்றும் உனதாகும் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-15, 3:35 pm)
Tanglish : malai manam nee
பார்வை : 177

மேலே