அழகின் ஆணவம்

வட்ட நிலா,
முழு பௌர்ணமி நிலா அழகுதான்,
கவிஞர்களின் கைபிடித்து
உலகைச் வலம்வரும்தான் அதன் நடை,
அழகிய காதலியின்
வடிவமாக்கப் பட்டதுதான் அதன் உச்சம்,
பால் நிலா
அமைதியின் சொருபமாய் காணப் பெற்றதுதான்,
உலக காதல்களைஎல்லாம்
தன்னையே சுற்றி வரும்படி அமைந்ததுதான்,
ஆனாலும் அதை வடிவொத்த
உனக்கு, மிகுந்த ஆணவமும் கர்வமும்தான்.
பின் என்ன
கடுமைகொண்ட சூரியனையே உன் பின்னால்
சுற்றிவரும்படி பணிக்கின்றாயே.
வெறி கொண்ட உன் ஆசை
அழிவுக்குத்தான் வழிவகுக்கின்றது.

எழுதியவர் : jujuma (25-May-11, 12:31 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 332

மேலே