எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்...
உன் காதுமடற்க் கிடையே நீ திணிக்கும், உன் நெற்றியோர முடிகளின் எண்ணிக்கை எனக்கு தெரியும்...!
உன் நாவால் ஈரமாகும்,
உன் உதடு உலர எடுத்துக்கொள்ளும் நேரமும் எனக்கு தெரியும்..!
என்னுடன் நீ பேசுகயில்,
சில மணித்துளி அமைதியில் உன் மனத்திரையில் ஓடுவன எனக்கு
தெரியும்..!
புருவம் குவித்து, கண்கள் சுருக்கி,
விரல் நகம் கடித்து, நீ யோசிக்கையில், ஒரு நோடி உன் எண்ணச்சிதறலில், நான் வருவதும் எனக்கு தெரியும்..!
எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்கு தெரியும், என்பதும் எனக்கு தெரியும்..!
என்னை உனக்கு பிடிக்குமா என்று மட்டும் இதுவரை தெரியவில்லை..!

எழுதியவர் : அருண் (30-Aug-15, 11:57 pm)
Tanglish : enakku theriyum
பார்வை : 115

மேலே