வா வா வா தோழா,

ஏய் ஏய் ஏய் தோழா
வீணா பொலம்பாதா கொழா
வா வா வா தோழா
வாடா வாழ தோழா

பிரச்சனை இல்லா வாழ்கை பிசி இல்லாமல் போகும்
பீர் அடிக்க கூட காரணம் இல்லாமல் ஆகும்
ஏய் ஏய் ஏய் தோழா
வா வா வா தோழா

நாம் ஒன்னும் காணல் நீர் அல்ல
வெல்வோம் துணிவை இனி மெல்ல
பிரச்சனைகளை பின்னுக்கு தள்ள
கர்ஜிக்கும் சிங்கமாய் நீ ஆம்புள்ள

நம்பிக்கை இல்லோ நடை பிணமே
ஓடையும் கோடையில் வாடுமே
துன்பம் இன்பத்தின் மறுபக்கம்
வழக்கை என்பது இருபக்கம்
காலம் வரும் நேரம் வரும்
கை நீட்டி வரவேற்போம்

நொடி பொழுதும் தயங்காதே
கொடிய மிருகம் பயம்தானே
கருப்பு வெள்ளை உலகம்
நம்பிக்கை ஒன்றே திலகம்
இன்ப துன்பம் ஒன்றை ஒன்று மாறி மாறி கொள்ளும்

கருத்து வெளுத்தால் தான் மேகம்
வெறுத்து ஒதுக்கினால் தான் காகம்
குயிலே நல்ல நல்ல பாடும்

எறும்பாய் உழைப்போம் கல்லை கரைப்போம்
நிலவை கையில் அடைப்போம்
கை கோர்த்து நடு வானில் பறப்போம்

ஏய் ஏய் ஏய் தோழா
வா வா வா தோழா

நம்பிக்கை ஓடு மலை தாவு
நாளை நம் கையில் உறக்க கூவு

-கிருஷ்ணமூர்த்தி

எழுதியவர் : கிருஷ்ணா புத்திரன் (31-Aug-15, 5:49 pm)
பார்வை : 115

மேலே