பாடல் -முஹம்மத் ஸர்பான்
நான் பயிற்சிக்காய் எழுதிய காதல் பாடல்.படித்து பார்த்து குறைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.முழுமையாக படித்து பாருங்கள்
(என்னத்தே சொல்ல
நெஞ்சுக்குள்ள தொல்ல
நீ வந்தாய் உள்ளே
நான் தொலைந்தனே..!)2
ஒரு நாள் பார்த்தேன்
மறு நாள் விழுந்தேன்
உன் மனதில்
எழுந்து நின்றேன்.
நிலவே! வா..வா..
மலரே! வா..வா..
அவள் அழகில்
காவியம் படிப்போம்.
தா னன னானா
தன தன னானா
தா னன னானா
தன தன னானா
தாயின் கருவில்
வயிற்றில் இருந்தேன்
உன் இதயம்
கருவறை என்பேன்.
காதல் வாழ்ந்தால்
நாமும் வாழ்வோம்
இறைவனே!! நீதான்
பச்சைக்கொடி காட்டனும்.
மழையே!வா..வா..
பனியே!!வா..வா..
இருவரும் சேர்ந்து
அவள் தேகம் நனைப்போம்,
என்னத்தே சொல்ல
நெஞ்சுக்குள்ள தொல்ல
நீ வந்தாய் உள்ளே
நான் தொலைந்தனே..
கள்ளச் சிரிப்பு
மஞ்சச் சிவப்பு
அழகுக்கு அவள் தான்
இலக்கணச் சொல்லு..
உன் பெயர் அறியாமல்
ஒரு பெயர் வைத்தேன்
அன்பே,உயிரே..
சகியே..,கனியே!
தென்றலே வா..வா..
அலையே வா..வா..
காதல் கோட்டையை
அழியாமல் காப்போம்.
என்னத்தே சொல்ல
நெஞ்சுக்குள்ள தொல்ல
நீ வந்தாய் உள்ளே
நான் தொலைந்தனே
நீ வந்தாய் உள்ளே
நான் தொலைந்தனே..