இம்சித்துக் கொண்டிருக்கும்

நீ விட்டுச் சென்ற முத்தங்களில்
மீதமாய் இம்சித்து கொண்டிருக்கின்றன
உன் எச்சில் துளிகள்

சிறு மழையின் சாரலை ஒத்திருப்பதாகவும்
அவை சாகசங்கள் செய்விப்பதாகவும்
உதடுகள் ஒப்புவிக்கின்றன

வரிகள் இழையோடும் செவ்விதழ்களில்
விலாசங்களாய் எழுதப்பட்டு
தபால் தலைக்காகக் காத்திருப்பதாய்
பிதற்றுகின்றன

நொடிகள் தீர்ந்து, நிமிடங்கள் கடந்து
மணித்துளிகளை நெருங்கிவிடும் அச்சத்தில்
விட்டுவிலகி சென்ற உதடுகளுக்காய்
பரிதாபம் கொள்கின்றன

இன்னமும் ஈரம் காயாமல், படர்ந்தபடி,
என்னை இம்சித்து கொண்டிருக்கின்றன
உன் எச்சில் துளிகள்

எழுதியவர் : அகிலா (31-Aug-15, 6:17 pm)
பார்வை : 1718

மேலே