காலை வேளை

சூரியன் கதிர்களை
கலையவிட காத்திருந்த வேளை..

பால் நிலவு மறைவதற்கு
மணமில்லாமல் ஏங்கி கொடிருந்த வேளை.

சேவலின் சிவந்த கொண்டையில்
சின்னதாய் வெளிச்சம்பட்டு .
வேந்தன் நான் என கூவிட ஆயத்தமான வேளை..

சிட்டுக்குருவிகளும், குயில்களும்
அப்பா காலத்து ஆலமரத்தில்,,
கூடு கட்டி வைத்திருந்து.
வானத்தில் பறந்திட வாய்ப்பு தேடிய வேளை..

அந்த மார்கழி மாதத்து காலை வேளை..
மறக்கமுடியாத என் கிராமத்தில்..

எழுதியவர் : கணேச மூர்த்தி (31-Aug-15, 5:47 pm)
பார்வை : 328

மேலே