புது மனைவியின் பயமில்லா பதில்

மணமாகி மாதம் ஆறுக்கூட ஆகவில்லை;
மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது

தனது பழைய ஆசை நாயகியை தேடிச்சென்றது
அவனது புது மனைவிக்கு தெரியலாயிற்று..

“இதையே நான் செய்தால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் ?”

“அப்படியொன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்,
விவாகரத்துக்கான வழிவகைகளை ஆராய்வேன்!”

“அப்படியா ! இந்தாருங்கள் இதில் கையெப்பமிடுங்கள்

“என்ன இது ?’

“விவாகரத்து விண்ணப்ப படிவம் !”

“என்ன சொல்லுகிறாய் ?”

“நீங்கள் சொன்னதைதான் நான் செய்திருக்கிறேன்!
சொல்லப்போனால்
உங்களுக்கு முன்னால் நான் முந்திக்கொண்டேன் !”

“நீ மூன்று மாதம் முழ்காமல் இருக்கிறாய் தெரியுமா ?’

“தெரியும் ! ஆறுமாதமாக என்னை
அணு அணுவாக அனுபவித்துவிட்டு
இப்போது நான் சளித்துவிடேனா உங்களுக்கு..?”

“என் வீட்டாருக்கு தெரிந்தால் என்ன ஆகும்.. ?”

“ஒன்றும் ஆகாது……
அவளை கலைத்துவிட்டு போகச்சொல் என்பார்கள்,
விட்டது பீடை என்பார்கள், தொலைந்தது சனியன் என்பார்கள்,
அடுத்த வரதட்சணைக்கு வழி பிறந்தது என்பார்கள்,
மொத்தத்தில் உங்களைவிட
என்னை விரட்டிவிடுவதில் அவர்கள் முணைப்பாய் இருப்பார்கள்!”

“உன் வீட்டிற்கு தெரிந்தால்…?”
“அப்பா - என் சேமிப்பெல்லாம் வீணாய்போனதே என்பார்!
அம்மா – தன் குலகோத்திரத்தை சொல்லி சொல்லி அழுவாள்!
அண்ணன் – தனக்கு வாக்கப்பட்டவளுக்கு எதிரியாய் தெரிவான்
அண்ணி – அடிக்கடி குத்தி காண்பிப்பதலயே குறியாக இருப்பாள்
தங்கை – உன்னால் என் திருமணம் தடைபடுமே என புலம்புவாள்
தம்பி – தன் பாக்கெட் மணிக்கு 'தடா' வந்துவிட்டதாக அலுப்பான்
மொத்தத்தில்
“துக்கம் என்ற பெயரில் என் மொத்த சந்தோஷத்தையும்
சில்மிஷ வார்த்தைகளால் சாகடிப்பார்கள் !

நான் வாழாவெட்டியாம் ! வாய்ச்ச வீட்டில் வாயாடியதால்
பொறந்த வீட்டுக்கு விரட்டி விட்டுட்டார்களாம் –
பக்கத்து வீட்டார்கள் கதை கட்டுவார்கள் ! – அதை நம்பி
பலபேர் என்னை வப்பாட்டியாக்க திட்டமிடுவார்கள்..!

நான் இருதலை கொல்லி பாம்பாக
மத்தளத்திற்கு இருப்பக்கம் அடியாக
இரு வீட்டிலும் நிம்மதியில்லாமல் நடைபிணமாய் திரிவேன் !
இறுதியில் உறுதியாய் ஓர் முடிவெடுப்பேன்
என் இளமையை முதுமை திண்பதற்கு முன்பாக
என்னொத்த எனக்கேத்த ஆண் துணையை
அதுவும் விவகரத்து ஆனவனாய் பார்த்து கைபிடிப்பேன்!

எழுதியவர் : இரா.மணிமாறன் (31-Aug-15, 8:58 pm)
பார்வை : 214

மேலே