சுகவீனமான சுதந்திரம்

உலகில் தற்போது கிட்டத்தட்ட 192 நாடுகள் உள்ளது, சோவியத்தில் இருந்து பிரிந்த நாடுகள் உட்பட.

இவற்றில் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள், அதாவது மற்ற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் சுமார் 160. இதில் அதிகப்படியாக இங்கிலாந்து மட்டும் 52 நாடுகளையும், பிரான்ஸ், ஸ்பெயின், பழைய சோவியத்யூனியன் முறையே 24, 17, மற்றும் 15 நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. நியூசிலாந்து மட்டும் Haiti ஐ ஆக்கிரமித்திருந்தது.

முதன் முதலில் 1776 ல் காலனிகள் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது இன்றைய அமெரிக்கா. (பிறகு அதில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது வேறு விஷயம். இரண்டாவதாக Haiti (1804). மற்ற நாடுகள் விடுதலை அடைந்தது 1900 களில் இருந்துதான்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையில்தான் மக்களிடையே சுதந்திர உணர்வு மேலோங்க ஆரம்பித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜப்பான் (கொரியாவை ஆக்ரமித்த நாடு) சைனா, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், நேபாள், பூடான் போன்ற நாடுகள் மட்டுமே காலனி ஆதிக்கத்திற்கு உட்படவில்லை.

(இவை விக்கியில் படித்தவற்றின் சுருக்கம்)

சரி......அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்ற உணர்வு எதனால் எழுந்திருக்கும்......என்ற கேள்வி வரும்போது, ஆக்கிரமிக்கும் நாடுகள் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த நாடுகளில் இருந்த resources..(natural as well as human) ஐ exploit செய்தது முக்கிய காரணமல்ல......தங்கள் மதம், பழக்க வழக்கங்களை திணிக்க ஆரம்பித்தது தான் முக்கிய காரணமாகத் தோன்றுகிறது.

சுதந்திரமடைந்த நாடுகளில் எத்தனையோ நாடுகள் தன்னிறைவு பெற்ற நாடுகளாகி விட்டது. ஆனால் நாம்..........?

நாட்டின் எல்லைகளை விட்டு, அந்நியர்கள் சென்றபின் மனதின் எல்லைகள் குறுகிக் கொண்டே போகிறது.

இதற்கு ஒன்று இரண்டல்ல...எத்தனையோ நாட்டு நடப்புக்கள் சாட்சிகளாக இருந்து வருகிறது. ....எதைக்குறிப்பிடுவது? இதோ இப்போது விழுப்புரம்--கள்ளக்குறிச்சி-- சங்கராபுரம் சம்பவங்களே சாட்சி.

சுதந்திர தினங்களைக் கொண்டாடி வருகிறோம். சுதந்திர.....விசாலமான மனங்களை எப்போது கொண்டு வரப்போகிறோம்.?

சுதந்திரம் அடைந்த மக்களுக்குப் புகழ்தரக் கூடியது, அந்தச் சுதந்திரத்தை தங்கள் வருங்கால சந்ததிகளும் அனுபவிக்க வழிசெய்து விட்டுப் போவதுதான். அப்படித்தான் வழிசெய்து விட்டுத்தான் போனார்கள் நம் பெரியவர்கள்.
நாம்தான் வழிமாறி விட்டோம் அல்லது சுயநல சக்திகளால் வழி மாறி அழைத்துச் செல்லப் படுகிறோம்........

இன்னும் அடிமைகளாக.........
சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டு......

எழுதியவர் : முகநூலிலிருந்து (படித்தத (31-Aug-15, 10:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 72

புதிய படைப்புகள்

மேலே