காதல் தரும் வலி

உன் கூர்மையான வார்த்தை
கிழிந்திட்ட என் இதயம்
அதில் வழிந்தோடும் குருதியிலும்
உன் அழகிய பிம்பம்......

பச்சை பசுமையாய்
பனி சூழ்ந்த என் காதல் ரோஜா!!
உன் கோபத்தால்
கதிரவன் கண் பட்ட உலர்ந்த
குப்பையாய் நிலத்தில்..........

கதிரவனின் வருகையை
தலை சாய்த்து காதலித்த
என் குள தாமரை
உன் வருகை பாதை மாறிட
தண்ணீரில் முட்டி முட்டி
இதழ்களை காயமாக்கியது........

அழகிய சிற்பங்கள்
அதனிடையில் மாட்டிய சிறு புறா
வெளி வர முடியாமல்
உள்ளுக்குள் தவிக்கும் -என் மனம்
உன் கோபத்தில் சிக்கி.......

கதிரவனை நினைத்து
இரவில் தூங்கா நிலவு
அது போல் என் மனம்
உன் நினைவுகளுடன்........

உன் முதல் பார்வை
என் இதய வேதனையை
மறைத்திட
மறுமுறை பார்க்கமாட்டாயா??
நம் மன பரிமாற்றம் மறுமுறை
நிகழாதா -காதல் மறுமுறை
துளிர்காதா -என் மனம்

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (1-Sep-15, 12:08 pm)
Tanglish : kaadhal tharum vali
பார்வை : 210

மேலே