வேண்டும் வேண்டும் வேண்டும்
ஓர் ஊசி வேண்டும்!
என் உயிர் தனில் உனை கோர்க்க..
ஓர் பரமபதம் வேண்டும்!
உன்னோடு சேர்த்து எனை உருட்ட..
ஓர் இலக்கணம் வேண்டும்!
நமது காதல் மொழியினை தொகுக்க ..
ஓர் பரிபாஷ்சை வேண்டும்!
உனது மோகத்தின் கீதத்தை எடுத்தியம்ப...
ஓர் இளயராஜாவின் இன்னிசை வேண்டும்!
அந்தியில் என் மடியில் நீ இளைப்பாற..
ஓர் தூரிகை வேண்டும்!
உன்னுள் கரைந்த என் பெண்மையின் வண்ணத்தில் உனை தீட்ட....
ஓர் ஆயிரம் ஆயுள் வேண்டும்!
உன்னோடு நான் கொண்ட காதல் சொல்ல..
இன்னும் பற்பல யுகங்கள் வேண்டும்!
என் பதியுடன் கைகோர்த்து, தோள் சாய்ந்துக்கிடக்க....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
