நமக்குள்ளே போட்டியா

உன்னை தவறாகப் புரிந்து கொண்டு
பேசாமல் தவித்த ஒரு நாளில்...
நமக்குள்ளே சங்கடங்கள் எதற்கு என்றாய் ?
உன்னோடு பேசியதில் சங்கடமும் இல்லை
எந்த சந்தோசமும் இல்லை என்றேன்.
மறு நாள் என்னை அழைத்து
பேச மாட்டீர்கள் தானே என்றாய்...
நீ பேசி நான் எப்போது
பேச மறுத்திருக்கிறேன் என்றேன்.
"சிறு சிறு சங்கடங்களுக்கு பிறகு
நமக்குள் யார் முதலில் பேசுவது
என்பதுதான் பிரச்சினையே "