முதுமை - இயற்கை - கற்குவேல் பா

எழும்பூர் ரயில்நிலையம் எதிரே
தனியார் மருத்துவமனை ஒன்றினால்
" சில லட்சங்களில் என்று "
பெரியாதாய் வைக்கப்பட்டிருந்த
மூட்டு தேய்தலுக்கான
மூட்டுமாற்று அறுவைசிகிச்சை
விளம்பரப் பலகையை பார்த்தவரே
ரத்தன் பஜார் சாலையில்
அறுபது ரூபாய்க்கு வாங்கிய
பிரம்பினை ஊன்றிக்கொண்டு
சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி
தளராமல் நடந்துகொண்டிருந்தார்
அந்த எழுபது வயது முதியவர் !

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (1-Sep-15, 9:21 pm)
பார்வை : 70

மேலே