சொல்வதெல்லாம் உண்மை அல்ல வேறு கோணத்தில் சிந்தித்தது
“கண்ணில் படுவதை கவர நினைப்பது அறிவின்மை
கன்னி சிரிப்பதை காதல் என்பது மடத்தன்மை
எண்ணிக் கொண்டதை எளிதில் முடிப்பது பேராண்மை
தண்ணீ அடிப்பதை நிறுத்தி விட்டது நல்மனப்பாண்மை”
சொல்லிச் செல்வதை உடனே செய்வது செயல்வன்மை
அள்ளிக் கொடுப்பதை அளந்து கொடுப்பது குறையின்மை
கள்ளிச்செடியை களை எடுப்பது ஒன்றும் குற்றமின்மை
தள்ளிச் செல்பவரை விலகி நிற்பதால் பெரும் நன்மை
அவசரப்பட்டு முடிவு எடுப்பது அறிவுக்கு அழகின்மை
தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது பெருந்தன்மை
துட்டுக் கொடுத்து காரியம் முடிப்பது செயலின்மை
துட்டுப் பெற்று காரியம் முடிப்பது கொடும்பாண்மை
அடையாததை அடைந்ததாக அலட்டுவது அறனின்மை
முடியாததை முடித்ததாக மார்தட்டுவது முறையின்மை
பிடிக்காததை பிடித்ததாக பிதற்றுவது பற்றின்மை
படிக்காததை படித்ததாக பறையடிப்பது நெறியின்மை