அழைக்கிறேன்
ஏறெடுத்தும் பாராள்! இறங்கியகண் தூக்காள்!சொல்
வேறெடுத்துக் காட்ட விளம்பாள்!கண் - நீரெடுத்து
நின்றாலும் சொல்லாளே நோகும் கடுஞ்சொற்கள்!
என்றாலே பெண்ணென்பேன் யான்!
========== இந்த எனது கவிதைக்கு இதற்கு மாறுபட்ட பொருளில் வெண்பா ஒன்று எழுதித் தர நண்பர்களை அழைக்கிறேன்.....
இது குறிப்பாக சியாமளா ராஜசேகர், மெய்யன் நடராஜ், ஆவுடையப்பன், கருணாநிதி, Dr .கன்னியப்பன் போன்றவர்களுக்கு என்றாலும் வெண்பா எழுத விருப்பமுள்ளவர்கள் கலந்து மகிழலாம்., மகிழ்விக்கலாமே!==============