மையலூட்டும் மலரே
உன்னை நான் பார்க்கையிலே
என் நெஞ்சோரம்
மழைச்சாரல்..!
வாய்பேசா உந்தன் மேல்
இது என்ன...
இது என்ன... புதுக்காதல்..!!
பூவே நீ கூறிவிடு
உன் மனதின் எண்ணங்கள்..!
புன்னகையோ..!
இது பொன் நகையோ..!
உன் இதழில் தவழும்
வண்ணங்கள்...!
பூமியில் உதித்த விண்மீனாய்
உன் அழகிற்கில்லை
பஞ்சங்கள்..!
நீ மொட்டவிழ்க்கும்
நேரத்திலே..
போலிகளாகும்
வைரங்கள்..!
கட்டவிழ்ந்த கூந்தலிலோ
நீ காட்டினாய்
தேவதை தரிசனங்கள்...!!!